மாடித் தோட்டத்தில் விளையும் டாப் 10 காய்கறிகள்

மாடித் தோட்டத்தில் விளையும் டாப் 10 காய்கறிகளின் பட்டியல் இதோ

தற்போது நகரவாசிகள் காய்கறிகள், பூக்கள் மற்றும் செடிகளை வளர்க்க மாடித் தோட்டம் அமைக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர், இது அவர்களின் நேரத்தை பயனுள்ளதாக செலவிடவும், இயற்கை முறையில் விளைந்த புதிய காய்கறிகளைப் பெறவும் உதவுகிறது. மாடித் தோட்டக்கலைக்கு அதிக முதலீடு தேவையில்லை. அதிகம் தேவைப்படும் முதலீடு நேரம் மற்றும் ஆர்வம். ஒரு விதையை விதைத்தவுடன், விதை முளைத்து இலைகளுடன் மண்ணிலிருந்து வெளிவருவதைப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வு சொர்க்கமானது. இது தியானம் போன்றது. அந்த சொர்க்க உணர்வைப் பெற நீங்கள் ஒரு விதையை விதைக்க வேண்டும். அறுவடை வரை ஒரு செடியின் ஒவ்வொரு நிலையும் ஒரு மாய உணர்வைக் கொடுக்கும். உங்கள் வீட்டில் சில செடிகளை வளர்ப்பது மிகவும் மதிப்பு வாய்ந்தது.

உங்கள் மாடித் தோட்டத்தில் நீங்கள் விளைவிக்கக்கூடிய சிறந்த 10 காய்கறிகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்

1.கத்தரிக்காய்

கத்தரி பொதுவாக அனைத்து வகையான சைவ மற்றும் அசைவ உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் வாங்க வேண்டிய காய்கறி. விவசாயிகள் பல வகையான கத்தரிக்காயை பயிரிடுகின்றனர். உணவின் வகைக்கு ஏற்ப, கத்தரிக்காயைப் பயன்படுத்தலாம். பிரசித்தி பெற்ற பிரியாணி, கத்தரிக்காய் தொக்கு பக்க உணவாக இல்லாமல் வழங்கப்படாது. இது செடி வகை என்பதால் அதிக இடம் தேவைப்படாது மற்றும் மண் தொட்டிகளில் வளர்க்கலாம்.

கத்தரி விதைகளை இரவே ஊறவைத்து, நன்கு வடிகட்டிய மண்ணில் விதைக்கவும்.
30 சதவீதம் மண், 20 சதவீதம் உரம், 20 சதவீதம் கோகோபீட், 20 சதவீதம் மணல் மற்றும் 10 சதவீதம் வேப்பம் பிண்ணாக்கு தூள் சேர்த்து மண் கலவையை தயார் செய்யவும்.
கன்றுகள் 5-6 அங்குல உயரத்தை அடைந்தவுடன், அவற்றை புதிய தொட்டிகளில் இடமாற்றம் செய்யவும். தக்காளி, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி போன்ற துணை தாவரங்களுடன் இதனை வளர்க்கலாம்
செடி பூக்க ஆரம்பித்த பிறகு, தினமும் கொடுக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தவும்.
மகரந்தச் சேர்க்கையைத் தூண்ட பூக்களை மடித்து மெதுவாக தேய்க்கவும்.
ஊட்டச்சத்துக்காக, வாரத்திற்கு ஒருமுறை செடிக்கு மாற்றாக ஒரு கைப்பிடி உரம்/வாழைத்தோல்/ஜீவாம்ருதம்/முட்டை ஓடுகள்/பஞ்சகவ்யா ஆகியவற்றைச் சேர்க்கவும்.

  1. தக்காளி:

தக்காளி வளர எப்போதும் பரந்த இடங்கள் தேவையில்லை. அவை தொங்கும் கூடைகள், தொட்டிக ள், ஜன்னல் பெட்டிகள் மற்றும் பல வகையான கொள்கலன்களில் கூட நன்றாக வளரும். நீங்கள் அவற்றை எந்த அளவிலான கொள்கலனிலும் எளிதாக வளர்க்கலாம், கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும். கன்டெய்னர் விசாலமானதாக/ உங்கள் தக்காளிச் செடியை சிரமமின்றி வளர்க்கும் அளவுக்கு பெரியதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தக்காளி விதைகள் அல்லது செடிகளுடன் தொடங்கலாம். மேலும், தக்காளி செடி உயரமாக இருப்பதால், கூடுதல் ஆதரவுக்காக, தொட்டிகள் அல்லது கொள்கலனின் வெளிப்புறத்தில் ஒரு கூண்டைச் அமைக்கலாம்.

30:20:20:20:10 என்ற விகிதத்தில் மணல், செம்மண், உரம், கோகோபீட் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கொண்டு கலவையைத் தயாரிக்கவும்.
தக்காளி விதைகளை இந்த மண் கலவையில், ஒன்றிலிருந்து ஒன்று சம தூரத்தில் விதைக்கவும். விதைத்தவுடன் தண்ணீர் தெளிக்கவும்.
விதைகளை வைக்கோல்/காய்ந்த இலைகளுடன் தழைக்கூளம் செய்து, அரை-கிரீன்ஹவுஸ் விளைவை உருவாக்க ஓரளவு மூடி வைக்கவும்.
விதைகள் முளைக்கும் வரை 2-3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும். நான்கு ஜோடி இலைகள் தோன்றிய பிறகு, மரக்கன்றுகளை ஒரு பெரிய தொட்டியில் இடமாற்றம் செய்து, 4 பக்கங்களிலும் செடி சாயாமல் இருக்க குச்சிகளை ஊன்றி வைக்கவும்.
தக்காளி செடி பூக்கும் வரை வாரத்திற்கு ஒருமுறை ஒரு கைப்பிடி உரம் சேர்க்கவும்.
தக்காளி செடி மாவுப்பூச்சி மற்றும் இலை சுருட்டு தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதால், 15 நாட்களுக்கு ஒருமுறை பாத்திரம் கழுவும் கரைசலில் நீர்த்த வேப்ப எண்ணெயை கலந்து தெளிக்கவும்.

3.கொத்தமல்லி

கிண்ணத்தில் இருக்கும் குழம்பையும் அல்லது காய்கறி சாலட் ஐயும் மண மணக்கச்செய்யும் கொத்தமல்லியை விரும்பாதவர் யார்? இந்த சிறிய இலைகள் அவை சேர்க்கப்படும் ஒவ்வொரு உணவிற்கும் ஒரு அழகான நறுமணத்தை சேர்க்கும். மேலும் அவற்றை வீட்டில் வளர்ப்பது மிகவும் எளிதானது.

ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதைகளை எடுத்து சிறிது அழுத்தி இரண்டாக உடைக்கவும். உடைந்த விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும்.
மணல், செம்மண், கோகோபீட், வேப்பம் பிண்ணாக்கு மற்றும் உரம் ஆகியவற்றை சம அளவில் கலந்து மண் கலவையை தயாரிக்கவும்.
இந்த மண் கலவை நீர் வற்றிய பிறகு , இந்த மண் கலவையை நீள வாக்கில் கீறி அதில் விதைகளை விதைத்து மணலால் மூடவும்.
கீறப்பட்ட கோடுகளுடன் விதைகளை சமமாக பரப்பவும். விதைகளை மண் மற்றும் உலர்ந்த இலைகளால் லேசாக மூடி வைக்கவும். சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
விதைகள் முளைத்த பிறகு, 15 நாட்களுக்கு ஒருமுறை நீர்த்த மோர் அல்லது பஞ்சகவ்யாவுடன் தெளிக்கவும். செடிகளுக்கு அதிகமாக தண்ணீர் விடாதீர்கள்.
கொத்தமல்லி தயாரானதும் அறுவடை செய்யவும்.

  1. வெங்காயம்:

வெங்காயத்தின் பயன்பாடுகள் கணக்கிட முடியாதவை. சுவையான சாலட்களை தயாரிப்பது முதல் சுவையான உணவு மற்றும் மசாலா செய்வது வரை, பல சமையல்காரர்களின் முன்னுரிமை பட்டியலில் வெங்காயம் முதலிடத்தில் உள்ளது. அவை உண்பதற்கு சுவையாக இருக்கும் மற்றும் வெங்காயத்தை வீட்டில் வளர்ப்பது மிகவும் சிறந்த அனுபவம். வெங்காயம் அளவில் சிறியது என்பதால் இதனை உங்கள் மொட்டை மாடியில் அல்லது கொல்லைப்புறத்தில் எளிதில் பயிரிடலாம். குறிப்பாக, பச்சை வெங்காயம் சிறிய கொள்கலன்களில் நன்றாக வளரும் என்று அறியப்படுகிறது. உங்களுக்குத் தேவையானது 5/6 அங்குல ஆழமுள்ள ஒரு தொட்டி / கொள்கலன். இந்த அளவுள்ள தொட்டிகளில் வெங்காயத்தை எளிதாக வளர்க்கலாம்.

  1. உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு மிகவும் எளிதாக பயிரிடக்கூடிய தாவர காய்கறிகளில் ஒன்றாகும். ஒரு தொட்டியில் உருளைக்கிழங்கை வளர்ப்பது எப்போதும் வேடிக்கையாக இருக்கும். உங்களுக்கு சுமார் 10/12 அங்குல ஆழம் கொண்ட ஒரு கொள்கலன் தேவை. இந்த தொட்டிகளில், நீங்கள் எளிதாக 3 முதல் 4 உருளைக்கிழங்குகளை நடலாம். உருளைக்கிழங்கிற்கு போதுமான தண்ணீர் தேவைப்படுவதால், பிளாஸ்டிக் பானைகளை வைப்பது நல்லது. எனவே, உங்கள் உருளைக்கிழங்கு செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து, விரைவில் உற்பத்தி செய்யத் தொடங்குவதற்கு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், அவற்றின் தண்டுகள் முழுமையாக மண்ணால் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். உருளைக்கிழங்கு ஓரிரு மாதங்களில் செழித்து வளரும்.

  1. முள்ளங்கி:

முள்ளங்கிகளை வளர்ப்பதில் சிறந்த அம்சம் என்னவென்றால், அவை சிறிய அளவிலான பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான தொட்டிகளில் கூட நன்றாக வளரக்கூடியவை. நீங்கள் ஒரு கொள்கலனின் மேல் மட்டத்தில் விதைகளை தூவி விட வேண்டும். தினமும் இவற்றுக்கு தண்ணீர் ஊற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது மண்ணை எப்போதும் ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. சிறந்த விளைச்சலைப் பெற, ஆர்கானிக் மண் கண்டிஷனரைப் பயன்படுத்துவதை வழக்கமாக கொள்ளுங்கள்.

ஆர்கானிக் உரம், கோகோபீட் மற்றும் செம்மண் போன்றவற்றைக்கொண்டு மண்கலவையை தயார் செய்யவும்.
1 அங்குல இடைவெளியில் மண்ணில் சுமார் அரை அங்குல ஆழத்தில் விதைகளை விதைக்கவும்.
ஒரு வாரத்தில் விதைகள் முளைத்தவுடன், நாற்றுகளை 2-4 அங்குல இடைவெளியில் பிரிக்கவும். சிறந்த, நீளமான, வெள்ளை வகை முள்ளங்கியை வளர்க்க, சுமார் 20 லிட்டர் தொட்டி அல்லது கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு வாரம் கழித்து மண்புழு உரம் சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் ஊற்றவும்
சுமார் ஒரு மாதம் கழித்து அறுவடை செய்யலாம். இந்தியாவின் சில உணவு வகைகளில் (எ.கா. பெங்காலி), முள்ளங்கி இலைகளும் அடிக்கடி சுவையான உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

7.புதினா

வீட்டில் வளர்ப்பதற்கான பட்டியலில் உள்ள மிக எளிதான தாவரம், இதனை வளர்ப்பதற்கு மண் கூட தேவையில்லை!

சந்தையில் இருந்து வாங்கிய புதினா கொத்துகளிலிருந்து சில புதினாத் தண்டுகளை எடுத்து வைக்கவும்.
ஆரோக்கியமான, தடிமனான தண்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, முனையின் கீழே, நீளத்தில் சுமார் 15 செ.மீ. அளவில் வெட்டி அதில் இருந்து சில இலைகளை மெதுவாக அகற்றவும்.
அத்தகைய சில தண்டுகளை ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் வைக்கவும். சூரிய ஒளியில் இருந்து விலகி, வீட்டிற்குள் வைக்கவும்.
சில நாட்களில், தண்டுகளில் இருந்து புதிய இலைகள் மற்றும் வேர்கள் வளரும். நீங்கள் நேரடியாக இலைகளைப் பயன்படுத்தலாம் அல்லது செடிகளை புதிய மண் தொட்டியில் இடமாற்றம் செய்யலாம்.

  1. கேப்சிகம்/குடைமிளகாய்

குடைமிளகாய் விலை கூரையை எட்டியுள்ள நிலையில், வீட்டில் வலர்ப்பதின் மூலம் இதற்கு தீர்வு காண வேண்டிய நேரம் இது. கொஞ்சம் பொறுமை மற்றும் கவனத்துடன், நீங்கள் ஒரு மண் தொட்டியில் குடைமிளகாய் வளர்க்கலாம். நல்ல மண் கலவையுடன் விதைப்பதை தொடங்கவும். உங்கள் விரலால் மண்ணின் மேற்பகுதியை கீறி, பின்னர் விதைகளை அதன் மேல் தூவி, அதை முழுமையாக மூடுவதற்கு இன்னும் சிறிது மண்ணைச் சேர்க்கவும். அதன் மேல் நனையும் வரையில் சிறிது தண்ணீர் தெளிக்கவும், மண்ணை ஈரப்படுத்தினால் போதுமானது. ஆனால், மண்ணில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

மண் கலவையை தயாரிப்பதற்கு, கோகோபீட்/பீட் பாசி, வெர்மிகுலைட் (அல்லது பெர்லைட்) மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை சேர்க்கவும்.
கேப்சிகம் விதைகளை விதைக்க சிறந்த நேரம் குளிர்காலத்தின் பிற்பகுதி, வசந்த காலம் மற்றும் கோடையின் ஆரம்பம். இது மிதமான வெப்பநிலையில் நன்றாக வளரும்.
விதைகளை விதைப்பதற்கு ஒரு அகன்ற நாற்று தட்டிலை பயன்படுத்தவும். இதில் மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்க ஒரு பிளாஸ்டிக் கவரால் தட்டில் மூடவும்.
விதைகள் 10-15 நாட்களில் முளைத்தவுடன், பிளாஸ்டிக் கவரை அகற்றிய பின், தட்டை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும்.
இலைகள் நன்கு துளிர்த்தவுடன் மரக்கன்றுகளை பெரிய தொட்டி அல்லது கொள்கலன்களில் இடமாற்றம் செய்யவும். இந்த மண்ணை தளர்வாக மூடவும்.
நீர்ப்பாசன அட்டவணையை தவறாமல் பராமரிக்கவும். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் நீரில் கரையக்கூடிய கரிம உரங்களைப் பயன்படுத்துங்கள்.
புதிய கேப்சிகம் 60 முதல் 90 நாட்களில் முழுமையாக வளரும்.

9.மிளகாய்:

மிளகாய் செடியை எந்த அளவு தொட்டிகளிலும் வளர்க்கலாம். அவற்றை வெளியில் வைப்பதற்கு முன், வானிலை போதுமான அளவு வெப்பமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மிளகாயை நடவு செய்வதற்கு முன் போதுமான அளவு தண்ணீர் பாய்ச்சவும், இதனால் கொள்கலனில் உள்ள மண் பானையிலிருந்து அகற்றப்படும்போது உடைந்துவிடாது. கொள்கலனில் இருந்து விதைகளை அகற்றும் போது கவனமாக இருங்கள். போதுமான அளவு தண்ணீர், அது வளரும் மிளகாய்க்கு நன்றாக வேலை செய்கிறது.

சம அளவு கோகோபீட், உரம் மற்றும் பெர்லைட் (அல்லது தெர்மாகோலின் சிறிய துண்டுகள்) ஆகியவற்றை கலக்கவும்.
மண் கலவையை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, இரவு முழுவதும் போதுமான தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுத்த நாள், மிளகாய் விதைகள் ஒவ்வொன்றையும் மென்மையான மண்ணில் மெதுவாக அழுத்தி, தழைக்கூளம் / வைக்கோல் கொண்டு மூடவும்.
விதைகள் சிறிய கன்றுகளாக முளைக்கும் வரை தினமும் தண்ணீர் பாய்ச்சவும்.
இலைகள் தோன்றியவுடன், ஒவ்வொரு கன்றுகளையும் குறைந்தபட்சம் 20 அங்குல உயரம் கொண்ட பெரிய தொட்டியில் மாற்றவும்.
செடி பூக்கும் வரை தினமும் தண்ணீர் விட வேண்டும். பூக்கும் பிறகு நீர்ப்பாசனத்தின் இடைவெளியை குறைக்கவும். காய்க்கும் போது புதிய மிளகாயை அறுவடை செய்யவும்.

10.வெண்டைக்காய்

வெண்டைக்காய் உங்கள் தோட்டங்களில் வளர்க்க ஏதுவான சிறந்த தாவரங்களில் ஒன்றாகும். இது ஒரு சூடான பருவ காய்கறியாகும், இது வைட்டமின் ஏ நிறைந்துள்ளது மற்றும் பல வழிகளில் உண்ணலாம்
முதலில் வெண்டைக்காய் விதைகளை வீட்டிற்குள் தொட்டிகளில் விதைத்து, வானிலை வெப்பமடையும் போது அவற்றை திறந்த பகுதிக்கு மாற்றவும். இருப்பினும், நீங்கள் வெப்பமான காலநிலையில் வசிக்கிறீர்கள் என்றால், அவற்றை நேரடியாக வெளியில் நடலாம். வெண்டைக்காய் முழு வெப்ப வெயிலில் செழித்து வளரும், 5-6 மணிநேர சூரிய ஒளியைப் பெறும் இடத்தில் செடியை வைக்கவும், இல்லையெனில் அது அதிக காய்களை உற்பத்தி செய்யாது.

செடிகள் 2 முதல் 3 அடி உயரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்,
ஒரு வெப்ப வானிலை பயிராக, வெண்டைக்காய் எப்போது முழு சூரியனைப் வரவெற்கிறது.
வெண்டைக்காய் தகவமைப்புக்கு ஏற்றது மற்றும் அத்தகைய மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது, இருப்பினும் இது கரிமப் பொருட்கள் நிறைந்த நன்கு வடிகட்டிய மண்ணில் சிறப்பாகச் வளர்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top