வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க கோயம்புத்தூர் தோட்டக்கலைத்துறையில் காய்கறித்தோட்டம் கிட் களை பெற்று பயனடையலாம்.
வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத்துறையில் Vegetable Gardening Kit களை பெற்று ப்யனடையலாம் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய வேளாணமை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாடி வீட்டு காய்கறித் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நஞ்சில்லாத காய்கற்களை நாமும் நம் குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்ற நல்ல நோக்கம் உள்ள வீட்டுப் பெண்மணிகள் அனைவரும், தோட்டக்கலைத்துறை வழங்கி வரும் வீட்டு மாடி காய்கறித் தோட்டம் கிட்களை பெற்று பயனடையலாம்.
இந்த கிட்டில் 6 தென்னை நார் கழிவு கட்டிகளும், 6 பிளாஸ்டிக் பைகளும்,10 வகையான காய்கறி விதைகளும், 1 கிலோ 18:18:18 நீரில் கரையும் உரமும், 100 மிலி வேப்ப எண்ணெய் மருந்தும், செயல்விளக்க கையேடு ஒன்றும் சேர்த்து ரூ.522/- ஆகிறது. இதில் அரசு மானியம் போக மீதி ரூ.311/- மட்டும் செலுத்தினால் போதுமானது. பயன்பெற விரும்புபவர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை கொண்டு வந்தால், ஒரு நபருக்கு 5 கிட்டுகள் வரை வழங்கப்படும். இந்த கிட்டுகள் 12 வட்டாரங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.கிட்டு தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட அலுவலகங்களில் பெற்றுப் பயனடையலாம் என கோயம்புத்தூடர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கோயம்புத்தூர்.